

பாக்தாத்,
ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள ஹிட் நகரத்தில் இருக்கும் கபே ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் அப்பாவி பொதுமக்கள் ஆவர். தாக்குதல் நிகழ்த்தப்பட்டதும் சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினரும் மருத்துவக்குழுவினரும் விரைந்தனர். அன்பர் மாகாணத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலை ஐ.எஸ் பயங்கரவாதிகள் நிகழ்த்தியிருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.