

இந்நிலையில், வெள்ளி கிழமை வணக்கத்திற்கு வந்த ஷியா பிரிவினரை இலக்காக கொண்டு தீவிரவாதி ஒருவன் தற்கொலை வெடிகுண்டுகளை கட்டி கொண்டு வந்து அவற்றை வெடிக்க செய்துள்ளான்.
இந்த சம்பவத்தில் 39 பேர் பலியாகினர். 45 பேர் காயமடைந்துள்ளனர். இதேபோன்று கோர் மாகாணத்தில் டோ லெய்னா மாவட்டத்தில் சன்னி பிரிவினருக்கான மசூதி ஒன்று அமைந்துள்ளது. அங்கு வெள்ளி கிழமை இறை வணக்கத்திற்கு வந்த சன்னி பிரிவினரை இலக்காக கொண்டு தற்கொலை தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இதில் 33 பேர் பலியாகினர்.
இந்த இரு சம்பவங்களுக்கும் எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடைபெறும் பெருமளவிலான தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று வந்துள்ளது. இந்த வருட தொடக்கத்தில் காபூல் நகரில் அமைந்த ஈராக் தூதரகம் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதனை தொடர்ந்து அதற்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். அமைப்பு, வருங்காலத்தில் ஷியா பிரிவினரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துவோம் என கூறினர்.