உலகளாவிய வெப்பமயமாதலால் இனி கோடைகாலம் 8 மாதங்களாக இருக்கும் அதிர்ச்சி தகவல்

சுற்றுச்சூழல் தொடர்பான ஆராய்சிக் கட்டுரையில் 2070-ம் ஆண்டில் சிந்து-கங்கைச் சமவெளிப் பகுதிகளில் கோடைக்காலம் 8 மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.#GlobalWarming
உலகளாவிய வெப்பமயமாதலால் இனி கோடைகாலம் 8 மாதங்களாக இருக்கும் அதிர்ச்சி தகவல்
Published on

இங்கிலாந்தைச் சேர்ந்த ஐ.ஒ.பி எனும் நிறுவனம், சுற்றுச்சூழல் தொடர்பான ஆராய்சிக் கட்டுரைகளை வெளியிட்டு உள்லது அதில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையில், 2070-ம் ஆண்டில் சிந்து-கங்கைச் சமவெளிப் பகுதிகளில் கோடைக்காலம் 8 மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

.ஈதன் டிகா பல், ரெட்லி எம்ஹார்டன், மற்றும் அலெக்ஸ்டி செர்பினின் என்ற மூவரும் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி உள்ளனர்.

உலகில், தனித்துவமான காலநிலை இருக்கும் பகுதிகளில் ஒன்று, சிந்து-கங்கைச் சமவெளிப் பகுதி. இந்தப் பகுதிகளில் வெப்பநிலை தற்போது 31C-யாக இருப்பதாக அறிக்கையில் இவர்கள் கூறியிருக்கிறார்கள். 2070-ம் ஆண்டுவாக்கில் இந்த வெப்பநிலை பன்மடங்கு அதிகரிக்கக்கூடும் என்றும் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியாவது தடுக்கப்படாவிட்டால், காலநிலை சுழற்சியில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், இந்தியாவில் மக்கள்தொகை வேகமாக உயர்ந்துவருவது இந்தப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை மேலும் மோசமாக்கக்கூடும் என்று கூறுகிறார்கள்

1995-ம் ஆண்டின் கோடைக்காலத்தில், சிக்காகோ நகரத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட்டாகப் பதிவுசெய்யப்பட்டது. இந்த வெப்பநிலையின் காரணமாக, 739 இறப்புகள் பதிவுசெய்யப்பட்டது. கடந்த வருடம்கூட சென்னையில் மீனம்பாக்கம் பகுதியில் வெப்பநிலை 43.6 C யாக பதிவுசெய்யப்பட்டது. இப்படி வெப்பம் அதிகரித்த நிகழ்வுகள் பல இடங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், புவி வெப்பமயமாதல்... பருவநிலை மாற்றம் போன்ற கருத்துகள் போலியானது என்று கூறிவரும் நிலையில், ஸ்டீஃபன் ஹாக்கிங் இதுபோன்று எழும் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

"காலநிலை மாற்றங்களால் பூமி வெள்ளி கிரகத்தைப்போல மாறப்போவது உறுதி. புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் போன்ற கருத்துகளை மறுப்பவர்கள் வெள்ளி கிரகத்தைச் சென்று பார்த்துவிட்டு வரட்டும்.

அதற்கான பணத்தை நான் செலுத்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

அண்மையில் ஓசோன் படலத்தின் பாதிப்பு படிப்படியாக் குறைந்துவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்த நிலையில் புவி வெப்பமயமாதல் தொடர்பான கருத்துகள் மீண்டும் எழுப்பப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

#GlobalWarming #Summer #BRICS #EnvironmentalResearch

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com