ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு பாகிஸ்தான் வழங்கிய பாதுகாப்பின் முடிவே தீவிரவாத தாக்குதல்; சுஷ்மா சுவராஜ்

பாகிஸ்தான் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு வழங்கிய பாதுகாப்பின் முடிவே தீவிரவாத தாக்குதல் என சுஷ்மா சுவராஜ் சீன வெளியுறவு துறை மந்திரியிடம் இன்று கூறினார்.
ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு பாகிஸ்தான் வழங்கிய பாதுகாப்பின் முடிவே தீவிரவாத தாக்குதல்; சுஷ்மா சுவராஜ்
Published on

வூஜென்,

காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த 14ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் 350 தீவிரவாதிகள் பலியாகினர்.

இந்த நிலையில், இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வெளியுறவு துறை மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு சென்றுள்ளார். அவரை சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யீ வரவேற்றார். இந்த பயணத்தில் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக வாங்கை சந்தித்து சுவராஜ் இன்று பேசினார். இதனை தொடர்ந்து பேசிய சுவராஜ், இந்தியாவில் வருத்தமும், கோபமும் ஏற்பட்டுள்ள நிலையில் நான் சீனாவுக்கு வந்திருக்கிறேன். ஜம்மு மற்றும் காஷ்மீரில் எங்களது பாதுகாப்பு படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட மோசம் நிறைந்த தீவிரவாத தாக்குதல் இதுவாகும்.

பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட மற்றும் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த இயக்கத்திற்கு பாகிஸ்தான் நாடு வழங்கிய உரிமை மற்றும் பாதுகாப்பின் முடிவே தீவிரவாத தாக்குதல் என அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com