

காத்மாண்டு,
15-வது பிம்ஸ்டெக் மந்திரிகள் மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு இந்த கூட்டம் துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று நேபாள தலைநகர் காத்மாண்டு சென்றடைந்தார்.
கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், நேபாள பிரதமர் ஷேர் பஹதூர் டியூபா மற்றும் நேபாள அதிபரை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசுகிறார். பிம்ஸ்டெக் அமைப்பில் தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளான வங்களதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான், நேபாளம், ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.