

மனாமா,
பஹ்ரைன் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் பஹ்ரைன் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபாவை மனாமாவில் இன்று சந்தித்தார். மேலும் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் பஹ்ரைன் ஷேக் காலித் பின் அஹமத் அல் காலீபாவையும் சந்தித்தார்.
சுஷ்மா சுவராஜ் நேற்று பஹ்ரைனில் இந்திய புலன்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றினார். அப்போது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை பற்றி கருத்து தெரிவித்தார். மேலும் இரு நாடுகளும் கடந்த காலம் முதல் தற்போது வரை தங்களது புகழை பறைசாற்றி வருகின்றன. இது நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பயணம், அது தற்போது ஒரு புதிய கட்டமைப்பின் கீழ் வந்துள்ளது என்று அவர் கூறினார்.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில். சுஷ்மா சுவராஜின் இந்த வருகை பஹ்ரைன் உடனான வலுவான உறவை உறுதிப்படுத்தும். மேலும் இரு தரப்பினருக்கும் இடையே ஒத்துழைப்பு மற்றும் புதிய அம்சங்களை அடையாளம் காணும் வாய்ப்பை வழங்கும் என்று அவர் கூறினார்.