ஜார்ஜியாவில் துப்பாக்கி சூடு: பெண் உள்பட 4 பேர் பலி; குற்றவாளியை பிடிக்க பரிசு அறிவிப்பு

ஜார்ஜியாவில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் சுட்டதில் பெண் ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
ஜார்ஜியாவில் துப்பாக்கி சூடு: பெண் உள்பட 4 பேர் பலி; குற்றவாளியை பிடிக்க பரிசு அறிவிப்பு
Published on

பிலிசி,

ஜார்ஜியாவின் அட்லாண்டாவுக்கு தெற்கே 35 மைல்கள் தொலைவில் ஹாம்ப்டன் என்ற நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை தி நியூயார்க் டைம்ஸ் உறுதிப்படுத்தி உள்ளது.

அவர்களில் ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் அடங்குவர் என ஹாம்ப்டன் நகர காவல் தலைவர் ஜேம்ஸ் டர்னர் கூறியுள்ளார். எனினும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த துப்பாக்கி சூட்டில், ஆண்ட்ரி லாங்மோர் (வயது 40) என்பவர் ஈடுபட்டு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அவருக்கு எதிராக நான்கு கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

எனினும், இந்த சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் தெரிய வரவில்லை. அவருக்கு உயிரிழந்தவர்களை பற்றி முன்பே நன்றாக தெரியுமா? என்பது கூட தெளிவாக தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

லாங்மோரை கைது செய்வதற்கான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.8.2 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com