பெல்ஜியம் ரயில் நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்

ரயில் நிலையத்தில் சிறிய வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றதாக இளைஞர் ஒருவரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பெல்ஜியம் ரயில் நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்
Published on

பிரஸ்ஸெல்ஸ்

தாக்குதல் நடந்த ரயில் நிலையத்தில் நெருப்பும், சிறிய அளவிலான வெடிகுண்டு தாக்குதல் நடந்ததையும் நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தினர்.

அதிகாரிகள் இதை தீவிரவாத தாக்குதல் என்றே வர்ணித்துள்ளனர். மேலும் பெல்ட் பாம்ப் ஒன்றை கைப்பற்றி செயலிழக்கச் செய்ததாக தெரிகிறது. முன்னதாக 30 - 35 வயது இளைஞர் ஒருவர் அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்டவாறு தனது பயணபெட்டியிலிருந்து எதையோ வெடிக்கச் செய்ய முயன்றதாக கூறப்பட்டது.

தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் விமான நிலைய சுரங்கப்பாதையில் தற்கொலைப் படையின் தாக்குதலில் 32 பேர் இறந்த நிகழ்விலிருந்து பெல்ஜியத்தில் உச்சபட்ச பாதுகாப்பு எச்சரிக்கை அமலில் இருந்து வருகிறது. லண்டன், பாரிஸ் அடுத்து பிரஸ்ஸெல்ஸ்சில் தாக்குதல் நடந்திருக்கிறது.

பாரிஸ் தாக்குதல்

பாரிஸ் தாக்குதல் நடத்தியவர் ஐ எஸ் இயக்கத்திற்கு தனது ஆதரவை உறுதியளித்ததாக தெரிகிறது. தனது உறவினருக்கு எழுதிய கடிதத்தில் அவர் தனது ஆதரவை தெரிவித்திருந்ததாகவும், அவர் ஏற்கனவே காவல்துறையினர் கண்காணிப்பில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com