

நியூயார்க்,
ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சென்றுள்ளார். ஐநா கூட்டத்திற்கு இடையே, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்களை சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தினார். இருப்பினும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி காவ்ஜா ஆசிஃபை சந்திக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், ஐநா பொதுச்சபை கூட்டத்துக்கு இடையே, இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். இருப்பினும், இந்த சந்திப்பு குறித்து பதிலளிக்க இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் மறுப்பு தெரிவித்து விட்டார்.