சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து; பலர் பலி என அச்சம்

சுவிட்சர்லாந்தில் உள்ள பார் ஒன்றில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது.
பெர்ன்,
சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொந்தனா பகுதியில் உள்ள பார் ஒன்றில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பலர் ஒன்றாக கூடியிருந்தனர். 300 பேர் அமர கூடிய அளவில் கொள்ளளவை கொண்ட அந்த பார் அதிகாலை 2 மணியளவில் பொதுவாக மூடப்படும்.
இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் கரும்புகை பரவி சூழ்ந்து கொண்டது. இதனால், பாரில் கூடியிருந்த பலர் உள்ளே சிக்கி கொண்டனர். அவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில், தீ விபத்தில் சிக்கி பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த வெடிவிபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை. போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால சேவையும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story






