சுவிட்சர்லாந்து: சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு சுவிட்சர்லாந்து.
சுவிட்சர்லாந்து: சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
Published on

பெர்ன்,

சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு சுவிட்சர்லாந்து. இயற்கை அழகு நிறைந்த இந்நாட்டிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இதனிடையே, நெதர்லாந்தில் இருந்து 45 பேர் ஆம்னி பஸ்சில் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

விபத்து - 5 பேர் பலி

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஆல்பின் மாகாணத்தில் இன்று அந்த பஸ் சென்றுகொண்டிருந்தது. சுஷி என்ற கிராமத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com