ஐஎஸ் படைகளை சுற்றி வளைத்தது சிரிய ராணுவம்

ஐஎஸ் படைகளை சுற்றி வளைத்தது சிரியாவின் ராணுவம் என்ற தகவலை சிரிய மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
ஐஎஸ் படைகளை சுற்றி வளைத்தது சிரிய ராணுவம்
Published on

பெய்ரூட்

ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ஹோம்ஸ் எனும் முக்கிய நகரத்தை ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ஐஎஸ் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்குப் பகுதிகளை ராணுவம் நகர்ந்து வருகிறது.

பால்மைரா எனும் பழங்கால நகரத்திலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்திலுள்ள சுக்னா எனும் இடத்திற்கு ராணுவம் சென்றுள்ளது. அதன் அருகில் இன்னும் ஐஎஸ்சின் முழுக்கட்டுப்பாட்டிலுள்ள டீயர் அல்-சோர் எனும் மாகாணம் உள்ளது. சுக்னாவை ரணுவம் சுற்றி வளைத்துள்ளது என்று சிரிய அரசு செய்தி நிறுவனமான சானா தெரிவித்துள்ளது. இப்பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றினால் சிரியா போரில் முழுமையாக வெற்றி பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com