சீனாவிற்கு போட்டி: குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை அறிவித்த தைவான்


சீனாவிற்கு போட்டி: குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை அறிவித்த தைவான்
x
தினத்தந்தி 21 Sept 2025 9:39 PM IST (Updated: 22 Sept 2025 12:51 PM IST)
t-max-icont-min-icon

சீனாவுடன் ஒப்பிடுகையில் தைவான் மக்கள் தொகை மிகக்குறைவு ஆகும்.

தைபே நகரம்,

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. ஆனால் தைவானை இன்னும் தனது ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கருதுகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முனைப்பில் சீனா தீவிரமாக செயல்படுகிறது.

சீனாவுடன் ஒப்பிடுகையில் தைவான் மக்கள் தொகை மிகக்குறைவு. அதாவது கடந்த ஆண்டு நிலவரப்படி தைவானின் மொத்த மக்கள் தொகை 2½ கோடி ஆகும். எனவே நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்க தைவான் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி அங்கு ஒரு குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.1 லட்சமும், இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பரிசுத்தொகை ஒரு குழந்தைக்கு ரூ.3 லட்சமாகவும், இரட்டை குழந்தைகளுக்கு ரூ.6 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

1 More update

Next Story