உக்ரைன் நிவாரணப் பணிகளுக்காக தைவான் அதிபர் உதவி...!

உக்ரைனுக்கு தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க தைவான் அதிபர் சாய் இங் வென் முடிவு செய்துள்ளார்.
உக்ரைன் நிவாரணப் பணிகளுக்காக தைவான் அதிபர் உதவி...!
Published on

தைவான்,

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ரஷிய தாக்குதலால் கடுமையான பொருளாதார இழப்புகளையும் எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி புரிந்து வருகின்றன. ஆயுத உதவி, நிதி உதவியையும் அளித்து வருகின்றது.

இந்த நிலையில், ரஷ்யப் படைகளால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க தைவான் அதிபர் சாய் இங் வென் முடிவு செய்துள்ளார். அதிபர் சாய் இங் வென் ஒரு மாத சம்பளமாக 14,250 டாலர் பெறுகிறார் என ராய்ட்டர்ஸ் செய்தி நாளிதழில் வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு 10 லட்சத்து 80 ஆயிரத்து 028 ஆகும்.

இது தொடர்பாக அதிபர் சாய் இங் வென் கூறுகையில்,

ஜனநாயகத்தின் உலகளாவிய பங்காளிகளின் உறுப்பினராக, தைவான் இல்லை, நாங்கள் உக்ரைனை முழுமையாக ஆதரிக்கிறோம். உக்ரைன் நிவாரண நன்கொடைகளுக்காக தைவானின் நிவாரணப் பேரிடர் சங்கம் அமைத்த வங்கிக் கணக்கின் விவரங்களை வெளியுறவு அமைச்சகம் வழங்கும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com