‘சீனாவுடன் தைவான் முழுமையாக இணைவது நிச்சயம் நடக்கும்’ - ஜின்பிங் திட்டவட்டம்

பிரிவினைவாத சக்திகளை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
‘சீனாவுடன் தைவான் முழுமையாக இணைவது நிச்சயம் நடக்கும்’ - ஜின்பிங் திட்டவட்டம்
Published on: 

பீஜிங்,

நவீன சீனாவின் தந்தை எனப் போற்றப்படும் சன் யாட்-சென்னின் 160-வது பிறந்தநாள் விழா பீஜிங்கில் உள்ள மக்கள் மாளிகையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.

சீனாவுடன் தைவான் இணையும்

அப்போது பேசிய அவர், வரலாற்றின் ஓட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், தாய்நாடான சீனாவுடன் தைவான் முழுமையாக இணைவது நிச்சயம் நடக்கும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்...

மேலும், 'ஒரே நாடு, 2 அமைப்புகள்' என்ற கொள்கையின் கீழ் அமைதியான முறையில் இணைப்பதற்கே சீனா முன்னுரிமை அளிப்பதாகவும், பிரிவினைவாத சக்திகளை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே, தைவான் வான்பரப்பில் 29 சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் அத்துமீறி ரோந்துப் பணியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஆனால், இதைத் தைவான் அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

X