பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுங்கள்: பாக்.கிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா தெரிவித்துள்ளது. #donaldtrump | #Pentagon | #pakistan
பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுங்கள்: பாக்.கிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
Published on

வாஷிங்டன்,

தலீபான், ஹக்கானி குழு உள்பட தங்கள் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையமகமான பெண்டகன் செய்தி தொடர்பாளர் ராம் மன்னிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இதனை தெரிவித்தார்.

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எங்கள் எதிர்பார்ப்பு நேரடியானது. தலீபான்கள், ஹக்கானி குழுக்கள், தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டுபவர்களுக்கு இனி பாகிஸ்தான் தனது மண்ணில் புகலிடம் அளிக்க கூடாது. தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாத குழுக்களை அழிக்க, பாகிஸ்தானுக்கு குறிப்பிடத்தக்க மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அமெரிக்கா தெரிவித்துள்ளது. எந்த வேறுபாடும் இன்றி அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானுக்கான 900 கோடி டாலர் நிதி உதவி தற்காலிமாக மட்டுமே நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்த மன்னிங், நிதி உதவி அளிக்கும் திட்டம் ரத்து செய்யப்படவோ அல்லது மாற்றியமைக்கப்படவோ இல்லை என விளக்கம் அளித்தார்.

பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக அண்மையில் அறிவித்து அந்நாட்டை கடுமையாக விளாசிய டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பல்வேறு வகையான நிதி உதவியை நிறுத்தி வைப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. #donaldtrump | #Pentagon | #pakistan

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com