

காபூல்,
ஆப்கானிஸ்தானில் ஹீராத் மாகாணத்தில் இந்தியா கட்டி கொடுத்த சால்மா அணையின் அருகே சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பயங்கரவாதிகள் நேற்று இரவு நடத்திய இந்த தாக்குதலில் 10 போலீசார் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருதரப்பு சண்டை நடைபெற்ற போது 5 ஊடுருவல் காரர்களும் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா - ஆப்கானிஸ்தான் நட்பு அணையான சால்மா கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுத்து உள்ளனர் என உள்ளூர் போலீஸ் அதிகாரி கூறிஉள்ளார். ஆப்கானிஸ்தானில் சமீப காலமாக தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரமலான் கொண்டாட உள்ளநிலையில் தலிபான் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என ஆப்கானிஸ்தான் கோரிக்கை விடுத்து உள்ளநிலையில் இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.