ஆப்கானிஸ்தானில் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்; 5 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்; 5 வீரர்கள் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கில் தக்கார் மாகாணத்தில் கவாஜா கார் மாவட்டத்தில், தலைமையகத்திற்கு வெளியே ஹவா ஷினாசி பகுதியில் அமைந்த பாதுகாப்பு சோதனை சாவடியொன்றின் மீது ஆயுதமேந்திய தலீபான் பயங்கரவாத இயக்கத்தினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில், 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனை மாவட்ட கவர்னர் முகமது உமர் உறுதிப்படுத்தி உள்ளார். எனினும், இந்த மோதலில் தலீபான் அமைப்பினரும் பலத்த காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் அரசுடன், தலீபான் பயங்கரவாத தலைமை அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் மறுபுறம் இதுபோன்ற வன்முறை தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com