ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல்; பாதுகாப்பு படையினர் 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 10 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல்; பாதுகாப்பு படையினர் 10 பேர் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் வடக்கு பாக்லன் மாகாணத்தில் அமைந்த ராணுவ மற்றும் காவல் துறை கூட்டு படை தளத்தின் மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 3 ராணுவ அதிகாரிகள் மற்றும் 2 காவல் துறை அதிகாரிகள் பலியாகினர். பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதேபோன்று ஆப்கானிஸ்தானில் வடமேற்கு பாத்கிஸ் மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்துல் ஹக்கீம் என்ற காவல் துறை உயரதிகாரி உள்பட 5 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்களுக்கு எந்தவொரு ஊடுருவல் அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஆனால், தலீபான் தீவிரவாதிகள் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்க கூடும் என உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com