ஆப்கானிஸ்தானில் இணைய சேவைகளை முடக்கியது தாலிபான் அரசு


ஆப்கானிஸ்தானில் இணைய சேவைகளை முடக்கியது தாலிபான் அரசு
x

Photo Credit: AP

ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 6 மாகாணங்களில் பைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு, தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு, அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து அங்கு தலிபான்கள் ஆட்சி அமைத்தனர் இதையடுத்து அங்கு தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்களுக்கும் பல உரிமைகள் மறுக்கப்பட்டன. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் இல்லங்களில் வைபை இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், செல்போன் வாயிலான இணைய சேவைகள் இயக்கத்தில் உள்ளதாக, ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்.16 ஆம் தேதி, முதலில் வடக்கு பால்க் மாகாணத்தில் வைஃபை இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களான பாக்லான், படாக்‌ஷான், குண்டுஸ், நான்கார்ஹர் மற்றும் தகார் ஆகிய மாகாணங்களில், இன்று இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன தலிபான் அரசின் இந்த நடவடிக்கை, லட்சக்கணக்கான மக்களின் தகவல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை முடக்கியுள்ளது என்று ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

1 More update

Next Story