

கராச்சி,
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் லால் கட்டாய் என்ற மலை பிரதேசத்தில் பாதுகாப்பு சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இங்கு வந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் துணை ராணுவ படையினர் 6 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலீபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், துணை ராணுவத்தினரின் தாக்குதலில் எங்களது இயக்கத்தினர் பலர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த பகுதியில் பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.