போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன் ராணுவ தளம் மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல்; 17 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன் ராணுவ தளம் மீது தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன் ராணுவ தளம் மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல்; 17 வீரர்கள் பலி
Published on

ஹெராத்,

ஆப்கானிஸ்தானில் ரமலான் மாதத்தினை முன்னிட்டு ஜூன் 12ந்தேதி முதல் 19ந்தேதி வரை தலீபான் தீவிரவாதிகளுடன் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அந்நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி டுவிட்டர் வழியே தெரிவித்துள்ளார்.

இதனால் தலீபான் தீவிரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்துவது நிறுத்தி வைக்கப்படும்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கே ஹெராத் மாகாணத்தில் ஜாவோல் மாவட்டத்தில் அமைந்துள்ள ராணுவ தளத்திற்குள் நேற்றிரவு தலீபான் தீவிரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 17 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார். இதேபோன்று தீவிரவாதிகள் தரப்பிலும் பலர் காயமடைந்து உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. தாக்குதலை தொடர்ந்து ஆயுதங்களையும் தீவிரவாதிகள் கைப்பற்றி சென்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரின் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தலீபான் தீவிரவாதிகள் ஒப்பு கொள்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன் இந்த தாக்குதல் நடந்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com