ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: ஐந்து பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: ஐந்து பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
Published on

கந்தகார்,

ஆப்கானிஸ்தானின் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்களில் 5 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இருப்பதாக டொனால்டு டிரம்ப், அறிவித்த மறுநாள் இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானின் லஷ்கர் கா பகுதியில் போலீஸ் தலைமையகம் உள்ளது. இந்த தலைமையகம் முன்பு வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி காரை வெடிக்கச்செய்தான். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலியாகினர். 25 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தலீபான் பயங்கரவாதிகள், வெளிநாட்டு படைகள் முற்றிலும் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அமெரிக்க படைகளின் கல்லறையாக ஆப்கானிஸ்தான் இருக்கும் என்று எச்சரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com