ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 20 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுடனான மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 20 வீரர்கள் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் தோலக் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். எனினும், இந்த மோதலில் 20 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 20 பேர் காயமடைந்தனர்.

இதன்பின்னர் 10 வீரர்களை பயங்கரவாதிகள் சிறை பிடித்து சென்றுள்ளனர். இதனை மாவட்ட கவர்னர் சல்மான் யூசுப் உறுதிப்படுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து தோலக் மாவட்டம் தலீபான்களின் கட்டுக்குள் சென்றுள்ளது.

கடந்த 2 மாதங்களில் இதுபோன்று 17 மாவட்டங்கள் தலீபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் வாபஸ் பெறும் அறிவிப்பினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட சூழலில், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com