

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கு அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், போர் நிறுத்தம் இனி நடைமுறையில் இல்லை என்பதை எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி ஈரானிடம் தெளிவாக தெரிவித்துவிடோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்ந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதை டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். போர் நிறுத்தம் இல்லை என்பதால் இருநாடுகளுக்கும் தொடர்ந்து மோதிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துல்லது.
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடங்கிய போர், சுமார் 40 நாட்கள் நீடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், ஈரானின் உள்கட்ட மைப்புகள் பெருத்த சேதம் அடைந்தன. மேலும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கி, இந்தியா உள் ளிட்ட உலக நாடுகளில் எரிபொருள் நெருக்கடியும் ஏற்பட்டது.பின்னர் இரு தரப்பும் இடைக்கால போர் நிறுத்தத்தை அறிவித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன. இதில் பெரும் இடையூறுகளை கடந்து கடந்த மாதம் 17-ந்தேதி இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெ முத்து போட்டன. ஹார்முஸ் நீரிணை திறப்பு, ஈரானின் எண்ணெய் விற்பனைக்கு ஒப்புதல் உள்ளிட்ட 14 நிபந்தனைகளுடன் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
இதனால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் மெல்ல மெல்ல அமைதி திரும்பியது. மேலும் போரின் போது மூடப்பட்ட ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டு கச்சா எண்ணெய் வினியோகமும் சீராக தொடங்கியது.மறுபுறம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைக்கு ஏற்ப ஈரானும்-அமெரிக்காவும் இறுதி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வந்தன. அதேநேரம் ஹார்முஸ் நீரிணையை திறந்த ஈரான், அதில் கப்பல் போக் குவரத்துக்கு குறிப்பிட்ட பாதையை அறிவித்தது. அதை மீறி செல்ல முயன்ற 3 கப்பல்களை கடந்த 7-ந்தேதி ஈரான் தாக்கியது.இதனால் ஹார்முஸ் வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது.புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே ஈரான் எண்ணெய் வினியோகத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை உடனடியாக ரத்து செய்தது.
அடுத்த சில மணி நேரங்களில் ஈரான் மீது பயங்கர தாக்குதல் நடத்தி யது. 7-ந்தேதி இரவு முழுவதும் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த நாட்டின் ரேடார் அமைப்புகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் சேத மடைந்தன.மேலும் ஹார்முசில் கப்பல்களை தாக்கும் ஈரான் புரட்சிகர காவல் படைக்கு சொந்தமான படகுகள், பந்தர் அப்பாஸ் துறைமுகம் போன்ற பகுதிகளிலும் சரமாரியாக தாக்கியது.அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. குறிப் பாக பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்களை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, இரு நாடுகளுக்கு இடையே யான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதை அறிவித்த அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப், எனினும் பேச்சுவார்த்தையை தொடர அனுமதித் தார்இதைப்போல ஈரானின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் எனக்கூ றிய அவர், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை தாக்கியதற்காக ஈரா னுக்கு பதிலடி தொடரும் என்றும் கூறினார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு 2-வது நாளாக மீண்டும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் தெற்கு துறைமுக நகரங்கள், அணுமின் நிலையம் அமைந்திருக்கும் புஷேர் நகரம் உள்பட 90 இடங் களை தாக்கியதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப்பிரிவு தெரிவித்து உள்ளது. மேலும் தாக்குதல் குறித்த வீடியோ பதிவுகளையும் வெளியிட்டது.
கடந்த ஏப்ரல் மாதத்துக்குப்பிறகு முதல் முறையாக பாலங்களை குறி வைத்து நேற்று முன்தினம் இரவில் தாக்குதல் நடந்துள்ளது. குறிப்பாக கொலஸ்தான் மாகாணத்தில் ஒரு ரெயில் பாலம், கொல்லப்பட்ட உச்ச பட்ச தலைவரின் உடல் அடக்கம் நடைபெற்ற மசாத் செல்லும் வழியில் உள்ள 2 பாலங்கள் தகர்க்கப்பட்டன. அமெரிக்காவின் இந்த அதிரடி தாக்குதலில் முதல் நாளில் பலர் கொல் லப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவிலும் பல இடங்களில் உயிரி ழப்புகள் நிகழ்ந்துள்ளன.அந்தவகையில் 2 நாட்களாக நடந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்ட தாக ஈரான் அறிவித்து உள்ளது. மேலும் 78 பேர் படுகாயமடைந்து உள் ளதாக ஈரான் சுகாதாரத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் உசேன் கெர்மான்புர் தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்காவின் தாக்குதலுக்கு 2-வது நாளாக ஈரானும் பதிலடி கொடுத்தது. குறிப்பாக பஹ்ரைன், கத்தார் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா நடத்தியதைப்போன்ற வீரியத்தில் இந்த தாக்குதல் நடந்தது. எனினும் இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை. ஈரான் மீது மீண்டும் நடந்து வரும் தாக்குதல்களை டிரம்ப் மேற்பார்வையிட்டார். இந்த தாக்குதல் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு களை தனது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து அவர் பதிவேற்றினார்.