

ராமேசுவரம்,
இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக வருகிற ஜனவரி 2ஆம் தேதி தமிழக மீன் வளத்துறை அதிகாரிகளுடன் சென்னையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராம லிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நிரந்தரமான தீர்வை எட்ட வேண்டும் என்பதில் இலங்கை அரசு உறுதியாக உள்ளது. இதற்காக பல்வேறு நிலைகளில் பேச்சவார்த்தைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வருகிற 2027 ஜனவரி 2ஆம் தேதி இலங்கை மீன்வளத் துறை அமைச்சகத்தின் செயலர் தலைமையிலான அதிகாரிகள் தமிழ்நாட்டுக்குச்சென்று தமிழக அரசின் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. அவரது தலைமையில்பல் வேறு விஷயங்களில் புதிய அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இரு நாட்டு மீனவர்கள் விவகாரத்திலும் தீர்வை எட்ட முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு இலங்கை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறினார்.