தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் - இலங்கை அரசு அறிவிப்பு

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் - இலங்கை அரசு அறிவிப்பு
Published on

கொழும்பு,

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மீனவர்களின் 105 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

அவ்வாறு தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி உள்ளது. இந்நிலையில் அந்த படகுகள் அனைத்தும் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com