20 இந்தியர்களுடன் எண்ணெய் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தல்

மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா வளைகுடாவில் எண்ணெய் கப்பலில் இருந்த 20 இந்தியர்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 இந்தியர்களுடன் எண்ணெய் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தல்
Published on

லுவாண்டா

மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா வளைகுடாவில் மார்ஷல் தீவின் கொடியுடன் எண்ணெய் கப்பல் ஒன்று, லுவாண்டாவில் ஏற்றப்பட்ட எரிபொருள் எண்ணெயை வெளியேற்றுவதற்காக சென்று கொண்டிருந்த போது, டோகோவின் லோம் நகரிலிருந்து தென்கிழக்கில் 110 மைல் தொலைவில் திங்கட்கிழமை அதிகாலை தொடர்பை இழந்துள்ளது. இதனை கப்பல் (இந்தியா) நிறுவனத்தின் மேலாளர்கள் உறுதி தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணி முதல் 8 மணி வரை கொள்ளையர் தாக்குதல் நடந்தது என்பது புரிந்து கொள்ளப்படுவதாக கூறியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது கப்பலில் இருந்த ஒரு நைஜீரிய நாட்டவரை தவிர, 20 இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் கடத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கப்பல் மற்றும் பணியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவர்களுடைய பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், சம்மந்தப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கும் கூடுதல் தகவல்களையும் அளித்து வருவதாகவும் கூறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com