இங்கிலாந்தில் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு வாழ்நாள் தடை

2 மாணவர்களுடன் ஆசிரியை தகாத உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
லண்டன்,
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்தவர் ரெபேக்கா ஜாய்ன்ஸ் (வயது 31). இவர் 2022-ம் ஆண்டு தனது வகுப்பில் பயிலும் 2 மாணவர்களுடன் தகாத உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே பள்ளி நிர்வாகம் உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்தது. மேலும் சிறுவர்களின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ரெபேக்காவை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது அந்த 2 பேரையும் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததும், அதில் ஒரு சிறுவன் மூலம் ரெபேக்கா குழந்தை பெற்று கொண்டதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு கடந்த 2024-ம் ஆண்டு 6½ ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்தநிலையில் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட ரெபேக்கா ஜாய்ன்ஸ் வாழ்நாள் முழுவதும் ஆசிரியை பணியில் ஈடுபட தடை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.






