முகம் கோரமாக இருக்கும் சாம்பி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்

இளம் பெண் ஒருவர் சாம்பி எனப்படும் பேய் பொம்மையை தீவிரமாக காதலித்து வரும் நிலையில் அதையே திருமணம் செய்து கொள்ளவுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகம் கோரமாக இருக்கும் சாம்பி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
Published on

அமெரிக்காவை சேர்ந்த பெலிசிட்டி காட்லிக் என்ற பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சாம்பி பொம்மை பரிசாக தரப்பட்டது. இதையடுத்து கெல்லி என பெயர் வைக்கப்பட்ட அந்த பொம்மையை காட்லிக் தீவிரமாக காதலிக்க தொடங்கினார். முன்னர் இளைஞரை காதலித்து வந்த காட்லிக் அவரை பிரிந்த நிலையில் கெல்லி பொம்மையை காதலித்து வருகிறார்.

இப்படியான வினோத செயலில் ஈடுபட்டு வரும் காட்லிக் கூறுகையில், நான் கெல்லியுடன் நெருக்கமான அன்பை கொண்டுள்ளேன். எங்களது உறவை பலரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். என் கையில் கெல்லியின் பெயரை பச்சை குத்தியுள்ளேன், வரும் செப்டம்பரில் எனக்கும் கெல்லிக்கும் திருமணம் நடக்கவுள்ளது. கெல்லி மீது நான் கொண்ட காதலை மாற்றி கொள்ள முடியாது, நான் கெல்லியுடன் இருக்கும் போது மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். மனிதர்களை தான் காதலிக்க வேண்டும், இது போன்ற பொம்மையை காதலிக்கக்கூடாது என பலர் கூறுகிறார்கள். ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com