சிங்கப்பூர் விமான கண்காட்சியில் பங்கேற்க உள்ள தேஜஸ் போர் விமானம்

சிங்கப்பூர் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படை சார்பில் தேஜஸ் போர் விமானம் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
சிங்கப்பூர் விமான கண்காட்சியில் பங்கேற்க உள்ள தேஜஸ் போர் விமானம்
Published on

சாங்கி,

சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச விமான கண்காட்சி, உலக அளவில் விமான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் தளமாக விளங்குகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சர்வதேச விமான தொழில்துறை சார்பில் நடத்தப்படும் விமான கண்காட்சி சிங்கப்பூரில் வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் எம்.கே.-I போர் விமானத்தை இந்திய விமானப்படை காட்சிப்படுத்தவுள்ளது. இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படை பங்கேற்பதன் மூலம், தேஜாஸ் விமானத்தை காட்சிப்படுத்தவும், பிற பங்கேற்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்காக 44 பேர் கொண்ட இந்திய விமானப்படையினர் சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தனர். கடந்த காலங்களில், இந்திய விமானப்படை மலேசியாவில் மற்றும் துபாய் விமான கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com