

இஸ்லாமாபாத்,
காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படக்கூடும் என்றும் கூறப்படுவதால், அம்மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகிறார்கள். கலவரம் மூண்டால் அதை ஒடுக்கும் நோக்கத்தில், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நேற்று தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை அவசரமாக கூட்டினார். அதில், காஷ்மீர் நிலவரத்தால் தேச பாதுகாப்புக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.
இதுபோல், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெகமது குரேஷியும் அவசர ஆலோசனை நடத்தினார். பிராந்திய அமைதியை சீர்குலைக்க இந்தியா சதி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.