சிங்கப்பூர் கொடி ஏந்தியக் கப்பலை ஈரான் ராணுவம் தாக்கியதால் பரபரப்பு

ஆளில்லா விமானம் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணை
Published on

ஈரான்,

ஹார்முஸ் நீரிணை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் நிரந்தர அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள இருதரப்பும் 60 நாட்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து ஆராய்ந்து வருகிறது. தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்துக்கு பிறகு ஹார்முஸ் நீரிணையை வணிகக் கப்பல்கள் கடந்து வருகின்றன.

சிங்கப்பூர் கப்பல்

இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற சிங்கப்பூர் கொடி ஏந்திய 'எவர் லவ்லி' என்ற கப்பலை ஈரான் ராணுவம் தாக்கியுள்ளது. ஓமானின் தாஹித் துறைமுகத்திலிருந்து 7.5 கடல் மைல் தென்கிழக்கில், கப்பலின் வலது புறத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் கப்பலின் மேல்தளம் சேதமடைந்ததாகவும், உயிரிழப்புகள் ஏதும் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பின்வாங்கும் கப்பல்கள்

ஆளில்லா விமானம் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தாங்கள் அங்கீகரித்த வழித்தடத்தை மட்டுமே கப்பல்கள் பயன்படுத்த வேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஹார்முஸ் நீரிணையை கடக்காமல் பல்வேறு கப்பல்கள் பின்வாங்கியுள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com