ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்- 4 பேர் பலி...!

ஜப்பான் நாட்டில் நேற்று ஏற்பட்டு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானது.
Image courtesy: AFP
Image courtesy: AFP
Published on

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே நேற்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 60 கிலோமீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் நெடுஞ்சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன. மேலும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நான்கு நபர்கள் இறந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தலைநகர் டோக்கியோ உட்பட ஜப்பானின் கிழக்கு பகுதிகள் பெரும் பாதிப்பிற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com