ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு...!

ஜப்பானில் ஏற்பட்டு உள்ள பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே இன்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 60 கிலோமீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இரவு என்பதால் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தை தொடர்ந்து அலறியடித்துக்கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com