பிரேசிலில் பயங்கரம்: விளையாட்டில் தோற்றதைப் பார்த்து சிரித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - 7 பேர் உயிரிழப்பு

பில்லியர்ட்ஸ் விளையாட்டில் தோல்வி அடைந்த நபர்கள், தங்களைப் பார்த்து சிரித்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
பிரேசிலில் பயங்கரம்: விளையாட்டில் தோற்றதைப் பார்த்து சிரித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - 7 பேர் உயிரிழப்பு
Published on

பிரேசிலியா,

பிரேசில் நாட்டில் உள்ள மடோ கிராஸோ மாநிலத்தில், பில்லியர்ட்ஸ் விளையாட்டின் போது இரண்டு நபர்கள் விளையாட்டில் தோல்வி அடைந்துள்ளனர். அவ்வாறு தோற்றவர்கள் மீண்டும் ஒருமுறை விளையாட வருமாறு வெற்றி பெற்றவர்களை அழைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் அந்த நபர்கள் தோல்வி அடைந்ததால், அங்கிருந்தவர்கள் அவர்களைப் பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விளையாட்டில் தோல்வி அடைந்த நபர்கள், தங்களைப் பார்த்து ஏளனமாக சிரித்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமி உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய எட்கர் ரிக்கார்டோ மற்றும் எசேக்கியாஸ் ரிபேரோ ஆகிய 2 நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com