ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இன்று மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; 8 பேர் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் கஜினி நகரில் நவ் ஆபத் பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே இன்று மாலை ராக்கெட்டுகளை ஏவும் துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் குடியிருப்புவாசிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதனை மாகாண காவல் செய்தி தொடர்பு அதிகாரி வஹிதுல்லா ஜுமா தெரிவித்து உள்ளார். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

எனினும், ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், பொதுமக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என பொதுமக்களில் பலர் பலியாகி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com