

காபூல்,
ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் மேக்ரோராயன் இ சார் என்ற பகுதியில், ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் முகமது அப்சல் என்பவரின் வீடு உள்ளது.
இந்நிலையில், அவரது வீடு மீது திடீரென தாக்குதல் நடந்தது. இதில் அப்சல் மற்றும் அவரது 5 வயது மகன் இருவரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு உள்பட எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்க முன்வரவில்லை.