ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு; 5 பாகிஸ்தானிய வீரர்கள் படுகொலை

ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானிய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு; 5 பாகிஸ்தானிய வீரர்கள் படுகொலை
Published on

இஸ்லாமாபாத்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. இந்த நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருந்து பயங்கரவாதிகள், பாகிஸ்தானிய வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில், குர்ரம் மாவட்டத்தில் இருந்த பாகிஸ்தானிய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதனை ராணுவ ஊடக விவகார பிரிவு தெரிவித்து உள்ளது.

இதேபோன்று பாகிஸ்தானிய வீரர்களும் பயங்கரவாதிகளை நோக்கி பதிலடி கொடுத்துள்ளனர். இதில், அவர்களுக்கும் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக் ஐ தலீபான் அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com