லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்பை நிறுவ முயன்ற பயங்கரவாதி படுகொலை; இஸ்ரேல் அதிரடி

லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் 3 பேரை 91-வது படை பிரிவை சேர்ந்த வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்பை நிறுவ முயன்ற பயங்கரவாதி படுகொலை; இஸ்ரேல் அதிரடி
Published on

டெல் அவிவ்,

காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வரும் சூழலில், அந்த அமைப்புக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு லெபனானில் இருந்து தாக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து, லெபனானையும் இஸ்ரேல் கடந்த காலத்தில் தாக்கியது.

இதன்பின்னர் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அமைதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தியது.

Also Read
போதை பொருள் கடத்தலை எதிர்கொள்ள... அமித்ஷா புதிய திட்டம் அறிவிப்பு
லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்பை நிறுவ முயன்ற பயங்கரவாதி படுகொலை; இஸ்ரேல் அதிரடி

இந்நிலையில், லெபனானின் தெற்கே ஹிஸ்புல்லா பயங்கரவாத உள்கட்டமைப்பை நிறுவும் முயற்சில் ஈடுபட்ட பயங்கரவாதியை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்கி வீழ்த்தி உள்ளனர்.

இதுதவிர, அந்த பகுதியில், பயங்கரவாத சதி திட்டங்களை ஊக்குவிக்கும் வகையிலான பல்வேறு கருவிகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களும் தாக்கி அழிக்கப்பட்டன.

இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டு உள்ள செய்தியில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வை மீறும் வகையில் அந்த பயங்கரவாதியின் செயல்பாடுகள் இருந்தன. அதனால், தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், லெபனானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை மீண்டும் உருவாக்கும் பணியில் ஈடுபட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் 3 பேரை 91-வது படை பிரிவை சேர்ந்த வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள் என்றும் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com