எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை

எக்ஸ் தளத்தின் நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே எம்.பி., மரியஸ் நில்சன் கோரிக்கை வைத்துள்ளார்.
எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை
Published on

நார்வே,

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டுவிட்டரை 2022- இல் வாங்கி எக்ஸ் என பெயர்மாற்றம் செய்தார்.

சுதந்திர பேச்சை வெளிப்படுத்த இதனை செய்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், ரஷியா- உக்ரைன் போரில் உக்ரைன் ராணுவத்துக்கு செயற்கைக்கோள்வழி தொடர்பினை அவரது நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்தது.

இவற்றுக்காக எலான் பெயரை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கலாம் என மரியஸ் நில்சன் தெரிவித்ததாக பொலிட்கோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முற்போக்கு கட்சியை சேர்ந்த மரியஸ் நில்சன் , ரஷியா - உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்க்கிற்கு வழங்க வேண்டும் என முன்மொழிந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com