இனி காரில் உண்மையாகவே பறக்கலாம்: டெஸ்லா நிறுவனத்தின் பறக்கும் கார் அறிமுகம்

அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் உருவாக்கிய மின்சார பறக்கும் காரான ‘ரோட்ஸ்டர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பறக்கும் கார்
டெஸ்லா பறக்கும் கார்
Published on: 

உலகின் நம்பர் 1 பணக்காரராக உள்ள எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களைத் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ரோட்ஸ்டர் கார் அறிமுக நிகழ்ச்சி, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சோதனை மையத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெரிய வளைவான பாதையில் கார் வேகமாக ஏறியது. தொடர்ந்து அந்தப் பாதையில் தலைகீழாகச் சென்ற கார், சிறிது நேரம் காற்றில் பறந்து மீண்டும் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இந்தக் காட்சிகள் பார்வையாளர்களை வியக்க வைத்தது.

ஸ்பேஸ்எக்ஸ் தொழில்நுட்பம்

இந்த காரில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, உந்துவிசை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், காரின் அடிப்பகுதியில் உள்ள விசிறி அமைப்பு, வளைவான பாதையில் கார் தலைகீழாகச் செல்லும்போது பிடிப்பை ஏற்படுத்த உதவுகிறது. இந்தச் சாகசக் காட்சியின் வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “எதிர்காலத்தில் பறக்கும் கார்களும் இருக்கும் என்பது இப்போது தெரியவந்துள்ளது” எனப்பதிவிட்டுள்ளார்.

2028-ல் உற்பத்தி தொடங்குமா?

இந்த புதிய ரோட்ஸ்டர் கார் கடந்த 2017-ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இதன் உற்பத்தி தள்ளிப்போன நிலையில், தற்போது 2028-ம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தற்போது காட்டப்பட்டுள்ள பறக்கும் திறன் பொதுச் சாலைகளில் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்றதாகத் தகவல் இல்லை. பாதுகாப்பு, சட்ட அனுமதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பெற்றால் மட்டுமே இதனை பொதுபயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும். இதனால், இந்தக் கார் எப்போது விற்பனைக்கு வரும் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com