டெக்சாஸ் பெருவெள்ளம்: 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை

காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கிறது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியையொட்டி மலைப்பிரதேசமான கெர் கவுன்டியில் திடீர் மழை பெய்தது. சுமார் 3 மணிநேரம் கொட்டி தீர்த்த இந்த பேய் மழை காரணமாக அங்குள்ள குவாடலூப் ஆற்றின் நீர்மட்டம் 'கிடுகிடு'வென உயர்ந்தது.
இதன் காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 81 பேர் பலியாகினர். வெள்ளம் ஏற்பட்ட வனப்பகுதி ஆற்றங்கரையோரம் கோடைகால முகாம் அமைத்து தங்கியிருந்த சிறுமிகள் 27 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இந்தநிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமிகள் உள்ளிட்டோரின் உடல்கள் கரை ஒதுங்கின. இதனால் டெக்சாஸ் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்தது. காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கிறது.
Related Tags :
Next Story






