தொலைபேசி உரையாடல் கசிந்ததால் சர்ச்சை: தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

தாய்லாந்து நீதிமன்ற உத்தரவையடுத்து சஸ்பெண்ட் செய்யப்படு இருந்த பிரதமர் ஷனவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
photo Credit: AP
photo Credit: AP
Published on

 பாங்காக்,

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனை தணிக்கும் வகையில், கம்போடியா முன்னாள் பிரதமரும், செனட் தலைவருமான ஹன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் பேசினார்.

அப்போது, அவரை 'அங்கிள்' என அழைத்ததுடன், தாய்லாந்து ராணுவ தளபதியையும் விமர்சித்து பேசியிருந்தார். மேலும், எது வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். அது குறித்து கவனம் செலுத்துகிறேன் எனவும் தெரிவித்திருந்தார். தாய்லாந்து பிரதமரின் இந்த உரையாடல் பொதுவெளியில் கசிந்தது. கம்போடியா முன்னாள் பிரதமரிடம் ராணுவ தளபதியை விமர்சித்த பிரதமர் ஷினவத்ராவிற்கு எதிராக தாய்லாந்தில் போராட்டம் வெடித்தது.

உடனடியாக தனது பதவியில் இருந்து ஷினவத்ரா விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், தாய்லாந்து பிரதமருக்கு எதிராக அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இது குறித்து விசாரித்த தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றம், பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நெறிமுறைகளை மீறியுள்ளார் எனவும், வழக்கு தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டியுள்ளதால், பிரதமர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவை பதவியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com