தாய்லாந்து: ரெயில் மீது கிரேன் சரிந்ததில் 22 பேர் பலி

ரெயில் செல்லும் பாதையில் அதிவிரைவு ரெயில் திட்டம் சார்ந்த பணிகள் நடந்து வந்துள்ளன.
பாங்காக்,
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று காலை ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது.
அந்த ரெயில், பாங்காக்கில் இருந்து 230 கி.மீ. தொலைவில் நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ரெயில் செல்லும் பாதையில் அதிவிரைவு ரெயில் திட்டம் சார்ந்த பணிகள் நடந்து வந்துள்ளன.
அதில் பயன்படுத்தப்பட்ட கிரேன் ஒன்று திடீரென சரிந்து ரெயிலில் ஒரு பெட்டியின் மீது விழுந்துள்ளது. இதில் ரெயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் 22 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
Related Tags :
Next Story






