தாய்லாந்து செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா..உங்களுக்கு இலவச உள்நாட்டு விமான சேவை


தாய்லாந்து செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா..உங்களுக்கு இலவச உள்நாட்டு விமான சேவை
x

இந்த திட்டம் 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை நடைமுறையில் உள்ளது.

பாங்காக்,

தாய்லாந்து அரசு 2025-இல் “Buy International, Free Thailand Domestic Flights” என்னும் புதிய பிரோமோஷன் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில், சர்வதேச விமான டிக்கெட் வாங்கி தாய்லாந்து நாட்டிற்குள் வருபவர்களுக்கு நாட்டுக்குள் இலவசமாக உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

இந்த திட்டம் 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை நடைமுறையில் உள்ளது.

தாய்லாந்துக்கு விமானம் மூலம் வரும் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் மட்டும் இந்த சலுகைக்கு தகுதியானவர்கள். சாலை மற்றும் கடல் வழியாக வருபவர்கள் இதில் சேர முடியாது.

ஒரு பயணிக்கு இரண்டு இலவச உள்நாட்டு விமான டிக்கெட் ( 2 trip or 1 Round Trip ) வழங்கப்படும்.

இந்த டிக்கெட் சலுகையுடன் 20 KG பாகேஜ் அனுமதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களது சர்வதேச விமான டிக்கெட்டை ஏர்லைன் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், ஆன்லைன் டிராவல் ஏஜென்டுகள் அல்லது மல்டி–சிட்டி ஆப்ஷன்களை வைத்துப் பதிவு செய்தால் இந்த சலுகையை பெற முடியும்.

இலவச டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சமாக ஒரு வழிக்கான விலை 1,750 பாஹ்த் (சுமார் ₹4,800)–க்கு அரசு சப்ஸிடி வழங்குகிறது; ரவுண்ட் டிரிப்புக்கு 3,500 பாஹ்த்.

சுற்றுலா வரவு அதிகரிக்கும் நோக்கில் —பாங்காக், புகேட் போன்ற முக்கிய இடங்களைத் தவிர, இஸான், சுகோதை, ஆயுத்தயா போன்ற முக்கியமான இடங்கள் செல்ல ஊக்குவிக்கப்படுகிறது.

யாரெல்லாம் இந்த சலுகையை பெறலாம்?

இந்தியா உள்ளிட்ட அனைத்துத் தேசங்களைச் சேர்ந்த பயணிகள் தகுதியுடன் இந்த சலுகையை பெற முடியும்.

நாடு முழுவதும் 2 லட்சம் பயணிகளுக்கு இந்த இலவச உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் அமலும் செய்யப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது?

✅ உங்களது சர்வதேச விமான டிக்கெட் பதிவு செய்த பின், பங்கேற்கும் ஏர்லைன்கள் (Thai Airways, Thai AirAsia, Bangkok Airways, Nok Air, Thai Lion Air, Thai Vietjet) மூலம் சரியான வழிகாட்டுதல்களை(System/TAT) பின்பற்றலாம்.தாய்லாந்து திட்டமிட்டு செல்பவர்களுக்கு நல்லதொரு சலுகை ஆகும்.

1 More update

Next Story