

வாஷிங்டன்,
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, டொனால்டு டிரம்ப் குடும்பத்துடன் இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்தார்.
அமெரிக்கா மற்றும் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு டொனால்டு டிரம்ப் தன்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இந்தியா மற்றும் அமெரிக்கா எப்போது நெருங்கிய நட்புறவு மற்றும் மரியாதையை கொண்டிருக்கும் என கூறினார் டொனால்டு டிரம்ப்.
இந்தியாவில் உலகளாவிய தெழில் முனைவேர் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதற்கு வருகை தரும் அமெரிக்க குழுவிற்கு தலைமை ஏற்று இந்தியாவிற்கு வரவேண்டும் என டொனால்டு டிரம்ப் மகள் இவாங்காவிற்கு பிரதமர் மோடி சிறப்பு அழைப்பை விடுத்து உள்ளார்.
அதற்கு பதிலளித்து பேசிய டொனால்டு டிரம்ப், உங்களுடைய அழைப்பை இவாங்கா ஏற்றுக் கொள்வார் என நம்புகின்றேன், என்றார்.
இந்நிலையில் டுவிட்டரில் தகவல் பதிவிட்டு உள்ள இவாங்கா டிரம்ப், அமெரிக்க குழுவிற்கு தலைமை ஏற்று இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி, என குறிப்பிட்டு உள்ளார்.