சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் நாளை பதவியேற்கிறார்

பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் நாளை பதவியேற்கிறார்
Published on

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இதை தொடர்ந்து, சிங்கப்பூரின் 9-வது அதிபராக அவர் நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

தர்மன் சண்முகரத்னம் இதற்கு முன், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதிமந்திரி, கல்வி மந்திரி, துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com