டொனால்டு டிரம்ப் மகள் இவான்கா டிரம்ப் பாதுகாப்பு அதிகாரிகள் கழிவறை பயன்பாட்டிற்கு மாதம் ரூ.2.19 லட்சத்துக்கு வாடகை வீடு

டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் மற்றும் ஜாரெட் குஷ்னர் தம்பதியின் பாதுகாப்பு அதிகாரிகள் கழிவறை பயன்பாட்டிற்காக மாதம் ரூ.2.19 லட்சத்துக்கு வாடகை வீடு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Image courtesy :J. Lawler Duggan/For The Washington Post
Image courtesy :J. Lawler Duggan/For The Washington Post
Published on

வாஷிங்டன்:

அமெரிக்கா அதிபரான டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் மற்றும் ஜாரெட் குஷ்னர் தம்பதியின் பாதுகாப்பு அதிகாரிகள் பற்றிய ஒரு சுவாரசியமான செய்தி வெளியாகி உள்ளது. இந்த தம்பதியின் பாதுகாப்பிற்காக அவர்களது வீட்டின் அருகில் அமெரிக்க ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர்.

பாதுகாப்பு வீரர்களுக்கு கழிவறை மற்றும் அலுவலக வசதிகளுக்காக இந்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டது. அந்த வீட்டிற்கு அமெரிக்க ரகசிய பாதுகாப்பு அமைப்பு மாதத்திற்கு ரூ.2.19 லட்சம் ( 3000 டாலர்கள்) கட்டணமாக செலுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவான்கா தம்பதியினருக்கு வாஷிங்டனில், 6 படுக்கையறைகள் 7 கழிவறைகளைக் கொண்ட 5000 சதுர அடி வீடு உள்ளது. சி.என்.என் செய்தியின் படி, பாதுகாப்பு வீரர்கள் இவான்கா டிரம்பின் வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

இவான்கா டிரம்ப் மற்றும் அவரது கணவரின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இந்த தம்பதியின் வீட்டில் இருந்த 7 கழிவறைகளில் ஒன்றை பயன்படுத்த ஏன் அனுமதிக்கப்படவில்லை என்பது தெளிவாகவில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது.

அமெரிக்கா ரகசிய சேவை பிரிவினர் ஒரு வீட்டை 2017 ஆம் ஆண்டு வாடகைக்கு எடுத்தது. அதாவது இதுவரை சுமார் ரூ.73 லட்சத்துக்கும் ( 100,000 டாலர்) அதிகமான தொகை செலுத்தப்பட்டுள்ளது.

இவான்காவின் வீட்டில் கழிப்பறை வசதிகளைப் பயன்படுத்த ரகசிய அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜுட் டீரெ குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com