ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது: விமான சிப்பந்திகள் 10 பேர் பலி

ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், விமான சிப்பந்திகள் 10 பேர் பலியாகியுள்ளனர்.
ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது: விமான சிப்பந்திகள் 10 பேர் பலி
Published on

டெஹ்ரான்,

ஈரானில் போயிங் 707 ரக சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானம் கிர்கிஸ்தான் நாட்டுக்கு சொந்தமானது என செய்திகள் வெளியாகியுள்ளன. விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 10 விமான சிப்பந்திகள் பலியாகியுள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com